ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல்
அரசியலமைப்பின் 4(ஆ) உறுப்புரையின் கீழ், இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி, இலங்கையின் தேசிய பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துகிறார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்று அதிகாரத்தின் பிரதானி என்ற வகையிலும், அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு அமையவும் ஜனாதிபதியின் அரசியலமைப்புரீதியான பொறுப்பிற்கு அமையவும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அரசாங்க பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதிக்கு தனது அரசியலமைப்புரீதியான கடமைகளை எந்தவித இடையூறும் அல்லது தடைகள் இன்றி செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் கீழ், பொலிஸ் மா அதிபரின் நியமனம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கு செய்யப்படும் இடையூறுகளும் அரசியலமைப்பு மீறலாகவே கருதப்படும். ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினால், அதற்கான நடவடிக்கைகளும் அரசியலமைப்பிலேயே வழங்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக செயற்படுகிறது. அத்தோடு ஜனாதிபதி அரசியலமைப்புக்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பையும் அரசியலமைப்புப் பேரவை வழங்குகிறது.
அரசியலமைப்புப் பேரவையானது அரசியலமைப்பிற்கு அமைவாக தனது கடமைகளை மேற்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளதோடு அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் பிரகாரம் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான தனது கடமையை மேற்கொள்ளாமல் தவிர்க்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு பணிப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அரசியலமைப்புச் சபையானது அரசியலமைப்பிற்கு முரணாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினால், அதற்கான தீர்வுகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சபாநாயகர் பாராளுமன்றத்தின் பிரதானி என்ற வகையில் அரசியலமைப்பின் 4(ஈ) உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக மக்களின் நீதிமன்ற அதிகாரம் செயற்படுத்தப்படுகிறது. அதன்படி பாராளுமன்றம் மக்களுக்கே பொறுப்புக்கூற வேண்டும்.
ஜனாதிபதி மேற்படி விடயங்கள் தொடர்பிலான மேலதிக தௌிவுபடுத்தல்களை பாராளுமன்றத்தில் சமர்பிப்பார்.