மறைந்த ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்
சிறந்த அரசியல்வாதியும் தலைசிறந்த பொருளாதார நிபுணருமான மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொள்ளுப்பிட்டி சார்ள்ஸ் டிரைவில் அமைந்துள்ள இல்லத்திற்கு (28) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாபக் குறிப்பேட்டில் ஒரு குறிப்பொன்றையும் பதிந்தார்.