ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பு
டுபாயில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாடான COP28இற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு இன்று (02) நடைபெற்றது.
இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார்