பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில்

இலங்கையில் சோசலிச இயக்கத்தை உருவாக்க முன்னோடியாக பணியாற்றிய, மறைந்த பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவுதின நிகழ்வு (31) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ மகா சங்கசபை மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தலைமையில் நினைவு தின வைபவம் நடைபெற்றது.

சுற்றுச் சூழல் விஞ்ஞானி பேராசிரியர் ரணில் சேனாநாயக்க “சுற்றுச்சூழலும் அபிவிருத்தியும்” என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள்,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கல்விமான்கள், ளெிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அரச அதிகாரிகள், விசேட அதிதிகள் மற்றும் பிலிப் குணவர்தன குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.