ஜனாதிபதி வில்கமுவ மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வில்கமுவ பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகளை (29) நேரடியாக மேற்பார்வைச் செய்தார்.
“அஸ்வெசும” வேலைத் திட்டம் தொடர்பாக வில்கமுவ பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்திலிருந்த மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
அங்கிருந்த ஆசிரியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் வளப் பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதாக மாணவர்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி, அவர்களின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளுக்கும் வாழ்த்து கூறினார்.
அதனையடுத்து பாடசாலையின் அருகில் கூடியிருந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தங்களது பிரச்சினைகளை கேட்டறிய முன்வந்த ஜனாதிபதிக்கு பிரதேச மக்கள் நன்றி கூறினர்.